கோப்புப் படம். 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயம்

மகாராஷ்டிரத்தில் ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயமடைந்தனர்.

DIN

மகாராஷ்டிரத்தில் ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை வளாகத்தில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை திடீரென தாக்கியுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது தொழிற்சங்கத்தினர் சிலர் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 19 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் காவல்துறையினரின் 12 வாகனங்களும் சேதமடைந்தன.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT