கோப்புப்படம் 
இந்தியா

காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேடு செய்தவர்களை சும்மா விடமாட்டேன் : ஹிமாச்சல் பிரதேஷ் முதலமைச்சர்

புது தில்லி: காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேட்டில் ஈடுபட்ட ஒருவரையும் தண்டிக்காமல் விடமாட்டேனென ஹிமாச்சல பிரதேஷ் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

DIN

புது தில்லி: காவலர் தேர்வு வினாத்தாள் முறைக்கேட்டில் ஈடுபட்ட ஒருவரையும் தண்டிக்காமல் விடமாட்டேனென ஹிமாச்சல பிரதேஷ் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த வருட மார்ச் மாதம் 27இல் 1700 காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைப்பெற்றது. வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ஹிமாச்சல் அரசு எழுத்துத் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும் சிறப்பு விசாரணை குழுவும்  அமைக்கப்பட்டுள்ளது.

"குற்றம் செய்த ஒருவரும் தப்பிக்க முடியாது. இதெற்கென சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்திருக்கிறேன். யாரும் குற்றம் சொல்லமுடியாத படி தேர்வை ரத்து செய்கிறோம். இனி வரும் விசாரணையில் பலர் கைது செய்யக்கூடும்" என்று முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அறிவியல் மற்றும் தொழில்பண்பட்ட முறையிலும் விசாரிக்க இருப்பதாக சிறப்பு குழு கூறியுள்ளது.காவல் துறையினரின் தகவலின் படி இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT