முகப்பு
இந்தியா

சம்பாவத் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் உத்தரகண்ட் முதல்வர்

உத்தரகண்ட் மாநில சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வர் புஷ்கா் சிங் தாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

உத்தரகண்ட் மாநில சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வர் புஷ்கா் சிங் தாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அதேசமயம், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தனக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளா் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வியடைந்தாா்.

என்றபோதிலும், புஷ்கா் சிங் தாமி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா். இதனிடையே அடுத்த 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவா் போட்டியிட வசதியாக சம்பாவத் தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து கைலாஷ் அண்மையில் விலகினார்.

இத்தொகுதியில் வரும் 31ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 3ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வர் புஷ்கா் சிங் தாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →