இந்தியா

அசாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்)சட்டம் முற்றிலுமாக நீக்கப்படும் : அமித் ஷா உறுதி

DIN

குவாஹாட்டி : அசாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் உள்ள பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்படும்  என அமித் ஷா உறுதியளித்துள்ளார். 

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (Armed Forces (Special Powers) Act, AFSPA), இந்திய நாடாளுமன்றத்தால் செப்டம்பர் 11,1958ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஓர் சட்டமாகும். இச்சட்டம் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் "அமைதிக்குறைவான பகுதிகள்" என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்தியப் படைத்துறையின் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. 

1990இல் இந்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்பட்டது. 7 முறை இது விரிவாக்கப்பட்டது. மோடியின் ஆட்சியில் 23 மாவட்டத்தில் நீக்கப்பட்டது. அசாமின் 60% பகுதிகளில் இந்த சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது.

அசாமில் சில பகுதிகளில் மட்டும் இன்னும் இந்த சட்டம் அமலில் இருக்கிறது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சட்டம் அசாமில் முற்றிலுமாக நீக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT