இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இளம்பெண் தாக்குதல்:  6 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் இரு குடும்பத்தினரிடையே ஏஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுமியைத் தாக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் இரு குடும்பத்தினரிடையே ஏஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுமியைத் தாக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

புட்காம் மாவட்டத்தின் பொன்முகம் மாகம் கிராமத்தில் சாலை அமைப்பு தொடர்பான தகராறில் இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்னை கைகலப்பாக மாறியது. 

அப்துல் காலிக் பரே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அப்துல் ரஷீத் பரேயின் குடும்பத்தைத் தாக்கினர். 

தாக்குதலின் போது, ​​அப்துல் ரஷீத் பரேயின் 17 வயது மகளின் தலையில் சில கடுமையான பொருளை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் அருகில் மாகம் துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஸ்ரீநகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

தற்போது இளம்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், தாக்குதல் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தாகவும் மாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT