காங்கிரஸ் மூத்த தலைவர் பண்டிட் சுக் ராம் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம் புதன்கிழமை காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம் புதன்கிழமை காலமானார்.
ஹிமாச்சலப் பிரதேசம் மணாலியில் வசித்து வந்த பண்டிட் சுக் ராம்(வயது 95), கடந்த மே 4ஆம் தேதி மூளைப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அவரின் பேரன் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக 1993 முதல் 1996 வரை இருந்துள்ளார். மேலும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், 5 முறை ஹிமாச்சல் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.