இந்தியா

மே 16ல் நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

DIN

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வருகிற 16 ஆம் தேதி நேபாளம் செல்கிறார்.

மே 16 ஆம் தேதி புத்த பூர்ணிமா நிகழ்வை முன்னிட்டு பிரதமர் மோடி, நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினிக்குச் செல்லவிருக்கிறார். 

நேபாள பிரதரின் அழைப்பை ஏற்று வருகிற 16 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், புத்த பூர்ணிமாவையொட்டி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். 

கடந்த 2014 முதல் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி, நேபாளம் செல்வது குறிப்பிடத்தக்கது. 

நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT