இந்தியா

காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் கே.வி.தாமஸ் நீக்கம்

DIN

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ் கட்சியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டார். 

கடந்த மாதம் கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23}ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது.

 இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸýக்கு அவரின் கட்சி அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் அவர் கருத்தரங்கில் பங்கேற்றார். 

இதையொட்டி அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், கேரளத்தில் உள்ள திருக்காக்கரை பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  அந்தத் தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜோ ஜோசஃப்புக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப் போவதாகக் கடந்த புதன்கிழமை கே.வி.தாமஸ் தெரிவித்தார். எனினும் தான் காங்கிரஸிலிருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் கூறினார். 

இந்தச் சூழலில், மேலிட ஒப்புதலுடன் கே.வி.தாமஸ் காங்கிரஸில் இருந்து நீக்கப்படுவதாக கே.சுதாகரன் வியாழக்கிழமை அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT