அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தின் தெற்கு சாங்லாங்கில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சாங்லாங்: அருணாச்சலப் பிரதேசத்தின் தெற்கு சாங்லாங்கில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு சாங்லாங் பகுதியிலிருந்து தெற்கே 222 கிமீ தொலைவில் 120 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலாவிலிருந்து 57 கிமீ வட-வடமேற்கில் இன்று காலை 7.46 மணியளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.