கோப்புப்படம் 
இந்தியா

குளத்தில் துணி துவைக்க சென்றபோது நேர்ந்த சோகம்: 5 பெண்கள் பலி

மகாராஷ்டிரம் லத்தூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்யும் பெண்கள் 5 பேர் குளத்தில் துணி துவைக்க சென்ற இடத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN

மகாராஷ்டிரம் லத்தூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்யும் பெண்கள் 5 பேர் குளத்தில் துணி துவைக்க சென்ற இடத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சோக நிகழ்வானது மகாராஷ்டிரத்தில் உள்ள துல்ஷிராம் தண்டா கிராமத்தில் காலை 8:30 மணிக்கு அரங்கேறியுள்ளது. குளத்தில் துணி துவைக்க சென்ற போது பெண்கள் குளத்தில் மூழ்கி இறந்ததாக கிங்காவோ காவல்நிலையத்தினர் தெரிவித்தனர். 

குளத்தில் துணி துவைக்கும் போது பெண் ஒருவர் குளத்தில் கால் தவறி விழுந்து மூழ்க ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்ட மற்ற பெண்கள் அவரை காப்பாற்றும்  முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் குளத்தில் மூழ்கினர். 

 ராதாபாய் தொந்திபா ஆடே (45 வயது), அவருடைய மகள்கள் தீக்‌ஷா (20 வயது) மற்றும் காஜல் (19 வயது) இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மொஜ்மாபத் தண்டா பகுதியைச் சேர்ந்த சுஷ்மா சஞ்சய் ரத்தோட் (21 வயது) மற்றும் கங்காதர் ரத்தோட் (25 வயது) இருவரும் உயிரிழந்தனர். 

காவல்துறை விசாரணையின் போது இந்த பெண்கள் 5 பேரும் கடந்த 5 மாதங்களாக அகமத்பூர் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஊர் ஊராக கரும்பு வெட்டும் வேலை தேடி செல்வது வழக்கம் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

இதே போல கடந்த வாரம் மும்பையின் தொம்பிவ்லி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குளத்தில் துணி துவைக்க சென்ற போது குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT