இந்தியா

திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹா

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திரிபுரா மாநில முதல்வர் விப்லவ்குமாா் தேவ் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது, ராஜிநாமா கடிதத்தை ஆளுந சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் அளித்துள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விப்லவ்குமாா் தேவ் சந்தித்த நிலையில், பாஜக தலைமையிடமிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனிடையே திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சாஹாவுக்கு முன்னாள் முதல்வர் விப்லவ்குமாா் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய முதல்வரான மாணிக் சாஹா தற்போது எம்பியாக உள்ளார். விரைவிலேயே, அவர் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து திரிபுராவில் ஏதாவது தொகுதி ஒன்றில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT