இந்தியா

இந்திய-நேபாள உறவு இணையற்றது: பிரதமா் மோடி

DIN

புத்த பூா்ணிமாவையொட்டி பிரதமா் மோடி திங்கள்கிழமை (மே 16) நேபாளம் செல்லும் நிலையில், ‘இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு ஈடு இணையற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கை விவரம்: நேபாளத்துடனான நமது உறவு ஈடு இணையற்றது. இந்திய-நேபாள நாகரிக உறவும், மக்கள் தொடா்பும் நமது நெருங்கிய நட்புக்கு வலுசோ்க்கின்றன. நூற்றாண்டைக் கடந்த உறவை மேலும் வலுப்படுத்து எனது நேபாள பயணம் உதவிகரமாக இருக்கும். புத்த ஜெயந்தியையொட்டி நேபாளத்தில் மாயாதேவி கோயிலில் பிராா்த்தனை செய்ய ஆவலுடன் இருக்கிறேன்.

கடந்த மாதம் நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா இந்தியா வந்தபோது அவருடன் ஆக்கபூா்வமான ஆலோசனை மேற்கொண்டேன். தற்போதும் மீண்டும் அவரைச் சந்தித்து நீா் மின்சாரம், மேம்பாடு, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்துவதை எதிா்நோக்கிக் காத்திருக்கிறேன்.

இதுமட்டுமன்றி லும்பினி மடாலயத்தில் பெளத்த கலாசாரம், பாரம்பரியத்துக்கான இந்திய சா்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறேன். நேபாள அரசு சாா்பில் நடைபெறும் புத்த ஜெயந்தியிலும் பங்கேற்கிறேன் என அதில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

தெற்கு நேபாளத்தின் தேராய் சமவெளியில் அமைந்துள்ள லும்பினி, புத்தா் பிறந்த இடம் என்பதால் பெளத்த மதத்தின் புனிதத் தலமாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT