இந்தியா

சார்தாம் யாத்திரை தொடங்கி இதுவரை 39 பக்தர்கள் பலி

DIN

உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 39 பக்தர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 6-ம் தேதி கேதார்நாத் கோயிலும், மே 8-ம் தேதி பத்ரிநாத் கோயிலின் நடையும் திறக்கப்பட்டது. 

சார்தாம் யாத்திரை தொடக்கத்தில், பயண வழித்தடங்களில் பக்தர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது என்று டிஜி தெரிவித்தார்.

இதுகுறித்து உத்தரகண்ட் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் ஷைலஜா பட் கூறுகையில், 

சார்தாம் யாத்திரை தொடங்கியதிலிருந்து, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏற்றத்தினால் ஏற்படும் பயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 39 பேர் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். 

ரிஷிகேஷ் ஐஎஸ்பிடி பதிவு தளத்தில் பயணிகளின் சுகாதார பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. யமனோத்ரி மற்றும் கங்கோத்ரி யாத்திரை பாதையில் முறையே டோபாடா, ஹினா மற்றும் பத்ரிநாத் கோயில் யாத்ரீகர்களுக்காக பாண்டுகேஷ்வரில் சுகாதார பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதனைக்குப் பின், உடல் நலக்குறைவு கண்டறியப்பட்ட பயணிகள், ஓய்வெடுக்கவோ அல்லது உடல் நலம் தேறிய பின்னரே பயணம் மேற்கொள்ளவோ ​​அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, 

ரிஷிகேஷ் தவிரப் பயண வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் பக்தர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. 

உடல்நிலை சரியில்லாத பக்தர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT