இந்தியா

நேபாளம்: லும்பினி மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

DIN

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயா தேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனிதத் தலமான மாயாதேவி கோயிலுக்கு நேபாள நாட்டுப் பிரதமர் ஷேர் பகதூர் தேயூபாவுடன் பிரதமர் மோடி வழிபாடு செய்தார் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

புத்தரின் பிறந்த இடத்தில், மார்க்கர் கல்லில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் பௌத்த முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. 

மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

லும்பினியில் அன்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

புத்த பூர்ணிமாவின் இந்த நாளில் நேபாளத்தின் அற்புதமான மக்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. லும்பினியில் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நேபாளத்துக்குச் செல்வது இது ஐந்தாவது முறையாகும்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT