இந்தியா

அசாமில் 1183 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அசாம் மாநிலத்தில் 1183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

DIN

அசாம் மாநிலத்தில் 1183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கரீம் கஞ்ச் மாவட்டத்தில் அசாம்-திரிபுரா எல்லையில் லாரியில் இருந்து 1183 கிலோ கஞ்சாவை அசாம் போலீசார் திங்கள் இரவு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர். 

திங்கள் இரவு சுமார் 11 மணியளவில், திரிபுராவிலிருந்து கௌகாத்தி நோக்கி வந்த சரக்கு லாரி முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது என்று பொறுப்பாளர் நிரஞ்சன் தாஸ் தெரிவித்தார். 

இதையடுத்து, சோதனையில் லாரியில் இருந்து 1183 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. லாரி ஓட்டுநர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விகடன் தீபாவளி மலர்

கலைமகள் தீபாவளி மலர் 2025

ஆரஞ்சு எச்சரிக்கையில் திருவள்ளூர்! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு

சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல்; நாளை இரவுக்குள் கரையைக் கடக்கும்!

ஆண் நண்பர் மீது எண்ணெய், ஒயின் ஊற்றி எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT