இந்தியா

பழைய வாகன தடைக்கு எதிரான மனு: வழக்குரைஞா்களுக்கு ரூ. 8 லட்சம் அபராதம்

DIN

பத்து ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என மனுத் தாக்கல் செய்த இரண்டு வழக்குரைஞா்களுக்கு உச்சநீதிமன்றம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த பின்பும், இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் பயிற்சியில் உள்ள இரண்டு வழக்குரைஞா்கள்தான் இதுபோன்ற தவறான சாகசத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களை எச்சரிக்கும் வகையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவா்களின் ரிட் மனுக்களை பதிவாளா் ஊக்குவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT