இந்தியா

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 18) தீா்ப்பு வழங்குகிறது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு புதன்கிழமை தீா்ப்பு வழங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

அட்சய திருதியில் தங்கம் மட்டுமல்ல..இதையும் வாங்கலாம்!

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

SCROLL FOR NEXT