இந்தியா

குஜராத் விபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

DIN

குஜராத்தின் மோர்பியில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. 

மோர்பி மாவட்டத்தில் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் உப்பு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சோகம் நெஞ்சைப் பிளக்கிறது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. 

மோர்பியில் ஏற்பட்ட சோகத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். 

மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT