FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜக மத உணர்வுகளை தூண்டுகிறது: மாயாவதி குற்றச்சாட்டு

பாஜக மத உணர்வுகளைத் தூண்டி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

1 பிப்ரவரி 2024, 2:47 pm IST
கோப்புப்படம்
பகிர்:

லக்னோ: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாஜக மத உணர்வுகளைத் தூண்டி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, மத வழிபாட்டுதலங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறது. பாஜகவின் இந்த சதி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் நாள்களில் நாட்டின் நிலைமை மோசமாகும் என்று மாயாவதி எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

தேசத்தை பலவீனப்படுத்த ஞானவாபி மசூதி, மதுரா மற்றும் தாஜ்மஹால் போன்ற பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன என்று மாயாவதி கூறினார்.

குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான இடங்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக மாற்றப்படுகின்றன. இது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைத்து, வெறுப்பை ஏற்படுத்தும். நாட்டின் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments