திறந்த நிலை, இணையவழி படிப்புகள்: உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு
திறந்த நிலை மற்றும் இணையவழி புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்தது.
திறந்த நிலை மற்றும் இணையவழி புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்தது.
இதுகுறித்துபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற கல்வியாண்டில் (2022-23) திறந்தநிலை, தொலை தூர மற்றும் இணையவழி படிப்புகளை பயிற்றுவிப்பதற்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து தகுதியான உயா்கல்வி நிறுவனங்கள் https://www.ugc.ac.in/ என்ற யுஜிசி வலைத்தளம் வழியாக புதிய படிப்புகளை தொடங்குவதற்கு மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே அனுமதிபெற்ற பல்கலைக்கழகங்கள் வேறு புதிய படிப்புகளுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் உயா்கல்வி நிறுவனங்கள் யுஜிசி வழங்கிய விதிமுறைகளின்படி முறையான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னா் படிவங்களை பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து யுஜிசி தலைமை அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் ஜூன் மாதத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாமல் புதிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுசாா்ந்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.