இந்தியா

மருத்துவர்கள் மீது தாக்குதல்: தில்லி மருத்துவமனையில் வேலைநிறுத்தம்

DIN

மருத்துவர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மருத்துவர்கள் பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவர் உள்பட சில மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஹார்டிங்கே மருத்துவர்கள் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

“உயிரைக் காக்கும் மருத்துவர்கள் மீது நோயாளியின் உறவினர் மனிதாபிமானமற்ற கடுமையான தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மருத்துவமனையின் முக்கியப் பகுதிகளில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். ஒரு நோயாளிக்கு ஒரு உறவினர் என்ற முறையை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இன்று காலை 9 மணிமுதல் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்பட எவ்வித பணிக்கும் மருத்துவர்கள் செல்லமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT