இந்தியா

ஹைதராபாத்தில் கால் இடறி விழுந்து புலனாய்வு அதிகாரி பலி; பரவும் விடியோ

IANS

ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி கால் இடறி விழுந்து படுகாயமடைந்ததில் பலியானார்.

புலனாய்வுத் துறையின் உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் (51), வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு, ஷில்பா கலாவேதிகாவில் உள்ள மேடையை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த போது, மேடையின் நுனியில் இருந்த வெற்றிடத்தைக் கவனிக்காமல் கால் வைக்க, அங்கிருந்து கீழே விழுந்தார்.

அவருக்கு தலையில் உள்காயங்கள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். புலனாய்வு அதிகாரிகள் கால் இடறி விழுந்த விபத்துக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

அந்த விடியோவில், அரங்கத்தை தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த குமார் அம்ரேஷ், மேடையின் நுனிப் பகுதிக்கு வந்துவிட்டதை உணராமல் போய்விட்டார். அங்கு விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்த அமைக்கப்பட்ட இடைவெளியில் அவர் கால் வைக்க, நிலைதடுமாறி, இடரி கீழே இருந்த 12 அடி பள்ளத்தில் விழுந்தார். அங்கு விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கவும், தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கவும் படிகட்டுடன் கூடிய ஒரு சிறிய அறை இருந்தது. அதற்குள் அவர் விழுந்துவிட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT