இந்தியா

இலங்கை வழியில் இந்தியா பயணிக்கிறதா? - ராகுல்காந்தி ட்வீட்

DIN


புதுதில்லி: இந்தியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வழியில் பயணிப்பதுபோல் தெரிகிறது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், கடுமையான பொருளாதார நெருக்கடி காரணத்தால், இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக ஒரு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் வன்முறை வெடித்தது.

நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சியினரின் வீடுகளை மக்கள் சூறையாடிதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு கிராபிக்ஸ் வரைபடங்களை வெளியிட்டு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

இது தொடர்பாக அவரது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிலும் இலங்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வகுப்புவாத வன்முறைகள் ஒரே மாதிரியாக உள்ளது என்றும், மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மைகளை மாறாது. இந்தியா இலங்கை வழியில் பயணிப்பது போலவே தெரிகிறது என ராகுல் கூறியுள்ளார். 

அந்த வரைப்படத்தில் முதல் பகுதியில் 2017 முதல் 2020 வரையில் இரண்டு நாடுகளிலும் நிலவும் வேலையிண்மையும்,  2017 முதல் 2021 வரை இரண்டு நாடுகளிலும் பெட்ரோல் விலையையும்,  2020 -2021 ஆண்டுகளில் இரண்டு நாடுகளிலும் வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT