இந்தியா

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,364 பேருக்கு தொற்று

DIN

புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு1,829ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக  2,364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,582 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,303 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் விகிதம்1.22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 2,582 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,89,841 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோரின் விகிதம் 98.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தற்போது 15,419 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,91,79, 96,905 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13,71,603 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 84.54 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,77,570 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT