இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய 3 பார்களுக்கு சீல்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய மூன்று பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சிறார்களுக்கு மதுபானம் வழங்கிய மூன்று பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் உணவகத்துடன் கூடிய பார்களில் சிறார்களுக்கு மதுபானம் வழங்குவது மற்றும் பிற விதிமீறல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, 3 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பார்களில் சிறார்களுக்கு மதுபானம் வழங்குவதும், அனுமதிக்கப்பட்ட காலக்கெடு 11.30 மணிக்கு மேல் பார்கள் செயல்படுவதும் கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
இது தவிர பார்களின் உரிமையாளர்கள் அனுமதி பெறாமல், கூடுதல் மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறியப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
அதன்படி, நிர்வாகம் பார்களுக்கு சீல் வைத்ததுடன், மதுபானம் வழங்குவதற்கான உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.