பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
யாசின் மாலிக் மீது பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் எதிா்ப்பு தெரிவிக்கப் போவதில்லை’ என்று யாசின் மாலிக் கூறினாா்.
இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், தண்டனை விவரங்கள் குறித்து மே 25ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.