ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவர் மனைவி மற்றும் மகள் மீது தில்லியில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
2004-2009 ஆண்டு வரை மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே டெண்டர் வேலைவாய்ப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகளின் வீடு மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமான தில்லி, பிகாரில் உள்ள 17 இடங்களில் சிபிஐ போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையின்போது வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பலரிடமிருந்து லாலு பிரசாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத், அவரின் மனைவியும் பிகாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி ஆகியோரின் மீது தில்லியில் சிபிஐ வழக்குப்பதிந்துள்ளது.
முன்னதாக லாலு பிரசாத், பிகாா் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், கால்நடைத் தீவனங்களைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, பல்வேறு கருவூலங்களில் போலி ரசீதுகளை சமா்ப்பித்து மோசடி செய்த 5 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.