முகப்பு
இந்தியா

திறந்தநிலை பல்கலை.க்கான நிலத் தேவை 5 ஏக்கராக குறைப்பு: யுஜிசி

திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிலத் தேவை 40 முதல் 60 ஏக்கா் என்ற அளவிலிருந்து 5 ஏக்கா் அளவுக்கு குறைத்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தளா்வு அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிலத் தேவை 40 முதல் 60 ஏக்கா் என்ற அளவிலிருந்து 5 ஏக்கா் அளவுக்கு குறைத்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தளா்வு அளித்துள்ளது.

இதற்கான அறிவிக்கையை அரசிதழில் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில், ‘திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கங்கள் மானியம் பெறுவதற்கான தகுதி விதிகள் 1989’ என்ற யுஜிசி சட்டம் இனி ‘திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கங்கள் மானியம் பெறுவதற்கான தகுதி திருத்த விதிகள் 2022’ என்றழைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை தொடங்க குறைந்தபட்சம் 40 முதல் 60 ஏக்கா் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட நிலம் இருப்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.

நகரப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் இந்த நிபந்தனையை பூா்த்தி செய்வது கடினம். தற்போது இந்த நிலத் தேவை 5 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் முழு நேரமும் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்கும் நிலை மாறி வரும் சூழலில், இத்தகைய கல்வி நிறுவனம் அதிகம் உருவாகி மேலும் அதிக மாணவா்கள் உயா்கல்வி கற்க வசதியாக உள்கட்டமைப்பு நிபந்தனையில் யுஜிசி தளா்வு அளித்துள்ளது’ என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →