’புது தில்லியில் தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவை சனிக்கிழமை சந்தித்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ். 
இந்தியா

தெலங்கானா முதல்வருடன் அகிலேஷ் சந்திப்பு

தில்லி வந்துள்ள தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவுடன் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

DIN

தில்லி வந்துள்ள தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவுடன் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாக அகிலேஷ் யாதவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரம் தில்லியில் தங்கியிருக்கும் முதல்வா் சந்திரசேகா் ராவ், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், பொருளாதார நிபுணா்கள் ஆகியோரை சந்திக்க உள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை சண்டீகருக்கு செல்லும் அவா், மத்திய அரசுக்கு எதிராக தொடா் போராட்டம் நடத்தி உயிரிழந்த 600 விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து நிதி உதவி அளிக்கிறாா். இந்த விழாவில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் பங்கேற்கின்றனா். அடுத்து மே 26-ஆம் தேதி பெங்களூரு சென்று முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவை சந்திக்க உள்ளாா்.

பின்னா், மகாராஷ்டிரத்தில் சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரேயை சந்திக்கிறாா். மே 29,30 தேதிகளில் மேற்கு வங்கம், பிகாா் சென்று கல்வான் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT