இந்தியா

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: ராம்பன் மாவட்டத்தில் நிலவும் நெருக்கடி

DIN

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஆணையர் முஷ்ரத் இஸ்லாம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், 

மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து மட்டங்களிலும் பற்றாக்குறை குறிப்பாக ராம்பனில் இந்நிலை மிகவும் கவலையளிக்கின்றது. 

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பக் கோரி, பரவலான போராட்டங்கள் நடைபெறுவது மாவட்டத்தில் நெருக்கடியான  சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 

இனியும் தாமதிக்காமல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆணையர் கோட்ட ஆணையரிடம் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT