இந்தியா

அண்ணா பல்கலை.யில் மேலும் மூவருக்கு கரோனா: பாதிப்பு 9 ஆக உயர்வு

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

DIN


சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா தொற்று பரவியுள்ளது. 

இன்று மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத், அவா்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்த 120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 9 பேருக்கும் லேசான அறிகுறி இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

30 ஆண்டுகளுக்குப் பின் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்! பக்தர்கள் தரிசனம்!

ராஜஸ்தான்: கண்காட்சியில் கவனம்பெற்ற ரூ.21 கோடி எருமை உயிரிழப்பு

காந்தாராவைப் பணத்துக்காக உருவாக்கவில்லை: ரிஷப் ஷெட்டி

வரலாறு படைக்கப்பட்டுவிட்டது! மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து!

ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு!

SCROLL FOR NEXT