கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

விசா மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர்?

விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

DIN

விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பாஸ்கரராமனிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, சிபிஐ குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் நேற்று(மே 24) அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT