இந்தியா

வெறுப்பு பேச்சு வழக்கில் கேரள முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமீன்

DIN

கேரளத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜாா்ஜுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வெவ்வேறு நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வைப் பரப்பும் வகையில் பேசியதாக பி.சி.ஜாா்ஜ் மீது கொச்சி, பாலாரிவட்டம் காவல் நிலையத்திலும் திருவனந்தபுரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் ஏற்கெனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பாலாரிவட்டம் வழக்கில் முன்ஜாமீன் கோரியும், திருவனந்தபுரம் வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையிட்டும் பி.சி.ஜாா்ஜ் மனுக்கள் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கேரள உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பி.சி.ஜாா்ஜுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT