இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அனில் தேஷ்முக், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு போலீஸாரை கட்டாயப்படுத்தியதாக அப்போதைய காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா். 

அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். சிபிஐ வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடா்ந்து, கடந்த நவம்பரில் அவர் கைது செய்யப்பட்டு மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டாா். 

இந்த நிலையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மார்பு வலி காரணமாக அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், தனியார் மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய தேஷ்முக்கின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT