இந்தியா

நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 88% மக்கள்: மன்சுக் மாண்டவியா

DIN

புது தில்லி: நாட்டில் 88 சதவீத மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 193 கோடியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில்,

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் 88 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

வாழ்த்துகள் இந்தியா! தடுப்பூசி போட்ட பிறகும், கரோனா நோயை சரியான முறையில் பின்பற்றுங்கள் என்றார். 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 

நாடு விரைவில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்ற இலக்கை நோக்கி விரைகிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT