இந்தியா

தொடரும் நிலக்கரி பற்றாக்குறை...மோசமாகும் மின்தடை...தீர்வு என்ன?

DIN

செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதிக மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மின்துறை அமைச்சகத்தின் உள்மட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 

இதன் காரணமாக மோசமான மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிக்கப்பட்ட 197.3 மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு. 

வீழ்ச்சி முன்பு கணிக்கப்பட்டதிலிருந்து 15 சதவிகிதம் அதிகமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்திருப்பது, மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்திருப்பது ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. கடந்த 38 ஆண்டுகளில், வருடாந்திர மின் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்துவந்துள்ள சமயத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையையே இது காட்டுகிறது. 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரின் விளைவாக உலகளாவிய நிலக்கரியின் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனிடையே, இறக்குமதியை அதிகரிக்க கடந்த சில நாள்களில் இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறக்குமதியின் மூலம் நிலக்கரி இருப்பை அதிகரிக்காவிட்டால் வெட்டப்பட்ட நிலக்கரியின் விநியோகம் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இருப்பினும், நிலக்கரியை இறக்குமதி செய்ய பல்வேறு மாநிலங்கள் இன்னும் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. ஜூலை மாதத்திற்குள், நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும். ஏப்ரல் இறுதி வரையில், ஒரே ஒரு மாநிலம் மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT