இந்தியா

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

DIN

ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 9ஆம் தேதி ராஞ்சியிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. 

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. 

இந்நிலையில் மாற்றுத்திறனாளி குழந்தை மற்றும் அவர்களது பெற்றோருக்கு விமானத்தில் அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்தின் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT