இந்தியா

பாகிஸ்தானில் போலியோ தொற்று பாதிப்பு 6 ஆக உயர்வு

வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் மேலும் 2 பேருக்கு போலியோ தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் மொத்த பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் மேலும் 2 பேருக்கு போலியோ தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் மொத்த பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வைரஸ் சுழற்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதால் போலியோ நோய் தொற்றுகளின் வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போலியோ தொற்றுக்கு உள்ளான இருவரில் 18 மாத ஆண் குழந்தையும், அதே வயதுடைய பெண் குழந்தையும் ஆகும். 

பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ராணா சஃப்தாரின் கூற்றுப்படி, 

தெற்கில் கண்டறியப்பட்ட ஆறு போலியோ வழக்குகளும், சாக்கடை பிரச்னையினால் உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டன. 

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க குழந்தைகள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்றார். 

ஒரு வருடத்திற்குப் பிறகு ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானில் முதல் போலியோ நோயைக் கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

மூவர்ண சேலையில்... ஸ்ரவந்தி சொக்கராபு!

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

SCROLL FOR NEXT