இந்தியா

கான்பூர் தொழிற்சாலையில் வெடித்துச் சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி; 4  பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம், ரானியாவில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு  கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

DIN


கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், ரானியாவில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு  கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

ரானியா அக்பர்பூர் கோட்வாலியில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு கொதிகலன் வெடித்துச் சிதறியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தொழிலாளி ராமசரே பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு தொழிற்சாலை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என ராமசரே பாலின் மருமகன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT