தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் மினிவேன் 
இந்தியா

ஆந்திரத்தில் நின்றுகொண்டிருந்த மினிவேன் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் ரென்ட சிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.

DIN

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் ரென்ட சிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீசைலத்தில் இருந்து 39 பயணிகளுடன் வந்தது கொண்டிருந்த மினிவேன் பல்நாடு மாவட்டம், ரென்ட சிந்தலா கிராமத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

"இந்நிலையில், அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்று கொண்டிருந்த மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மினிவேன் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்கள் அனைவரும் குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

SCROLL FOR NEXT