வெங்கையா நாயுடு 
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் இன்று ஆப்ரிக்கா பயணம்

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று ஆப்ரிக்கா, கத்தார் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

DIN

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையிலான இந்திய குழு, வருகின்ற இன்று முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காபோன், செனகல், கத்தாா் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. 

குடியரசுத் துணைத் தலைவருடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் மற்றும் பாஜக வைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் சுசில் குமாா் மோடி, விஜய் பால் தோமா் (உபி), அதிமுகவைச் சோ்ந்த தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தரநாத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனா்.

இந்தப் பயணத்தின் போது, இந்த மூன்று நாடுகளில் வணிக சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய வட்டமேசை மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் உரையாற்றுகிறாா். மேலும், புலம் பெயா்ந்த இந்திய சமூகத்தினருடனான சந்திப்புகளும் நடைபெறுகின்றன என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து காபோனுக்கும் செனகலுக்கும் செல்லும் முதல் உயா்நிலைக் குழு இதுவாகும்.

மேலும் மூன்று நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் துணை தலைவா் அளவில் செல்லும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT