இந்தியா

பாஜக பெற்ற நன்கொடை ரூ.477 கோடி

DIN

கடந்த 2020-21ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.477.5 கோடி; காங்கிரஸ் பெற்ற நன்கொடை ரூ.74.50 கோடி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி கடந்த 2020-21ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடையானது ரூ. 477.54 லட்சமாகும். பல்வேறு அறக்கட்டளைகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அக்கட்சி திரட்டிய நன்கொடை இதுவாகும். 2020-21ஆம் ஆண்டில், தனக்கு வந்த நன்கொடைகளின் விவரத்தை பாஜக, தேர்தல் ஆணையத்திடம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி சமர்ப்பித்தது.
 காங்கிரஸ் கட்சி இதே காலகட்டத்தில் ரூ.74.50 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் சட்டப்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறக் கூடிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 கடந்த 2014-இல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT