இந்தியா

குஜராத் பால விபத்து: உச்சநீதிமன்றம் நவ. 14-இல் விசாரணை

DIN

குஜராத் பால விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

வழக்குரைஞா் விஷால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இந்த மனுவில், ‘இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பேலா எம் திரிவேதி அடங்கிய அமா்வு, இம்மனு வரும் நவம்பா் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT