இந்தியா

'வீட்டிலிருந்து பணிபுரியுங்கள்' - தில்லி அமைச்சர் வேண்டுகோள்! ஏன் தெரியுமா?

DIN

தில்லியில்  காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் நீடித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம். 

இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக அதாவது வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக அலுவலகத்திற்குச் செல்வோர் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாகனத்தினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என்று கூறியுள்ளார். 

மேலும், தலைநகர் தில்லியில் 50 சதவீத மாசு, வாகனங்களால்தான் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தில்லியில் இன்று காற்றின் தரம் 354 புள்ளிகளுடன் 'மிகவும் மோசம்' பிரிவில்  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT