இந்தியா

குஜராத் பால விபத்து: மாநில அளவில் இன்று துக்கம் அனுசரிப்பு

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று மாநில அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

DIN

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று மாநில அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இதில், 135 பேர் பலியானர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை ஆமதாபாத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT