முகப்பு
இந்தியா

பிகார் இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.17% வாக்குகள் பதிவு!

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 3 நவம்பர், 2022 at 12:07 PM
பகிர்:

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 24.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி மொகாமாவில் 27.30 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், கோபால்கஞ்சில் 21.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

பல சாவடிகளுக்கு வெளியே பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றன. மஹத்பந்தன் அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் இடைத்தேர்தல் இதுவாகும். 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 6ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.