இந்தியா

தில்லி அமைச்சராகப் பதவியேற்றார் ராஜ்குமார் ஆனந்த்! 

ஆம் ஆத்மி எல்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் தில்லி அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

DIN

ஆம் ஆத்மி எல்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் தில்லி அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

அவருக்கு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று காலை தில்லி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் முன்னிலையில் ஆன்ந்த் பதவியேற்றார். 

ஜிஎன்சிடிடியில் அமைச்சராக ராஜ் குமார் ஆனந்த்துக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்புக்குப் பின்னர் சக்சேனா தனது சுட்டுரை பதிவில், 

ஆனந்த்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர் தில்லி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

படேல் நகர் எம்.எல்.ஏ ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்த நிலையில், கேஜரிவால் தனது அமைச்சர்கள் குழுவில் ராஜ்குமார் ஆ‘னந்த் சேர்க்கப்பட்டார்.

சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த கௌதம், மத மாற்றத் திட்டத்தில் பங்கேற்றதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியதையடுத்து, அந்தப் பதவியைக் கடந்த மாதம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT