முகப்பு
இந்தியா

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் இம்ரான் கூறுகையில், 

கருவின் அளவு மூன்று செ.மீ முதல் 5 செ.மீ வரை இருந்தது. முதலில் குழந்தையின் அடிவயிற்றில், நீர்க்கட்டிகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. 

Advertisement

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அக்டோபர் 10-ம் தேதி குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு பெற்றோருக்குப் பரிந்துரைத்தனர். 

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டிகள் அகற்றப்பட்டது. 

பின்னர் தான் தெரிய வந்தது. குழந்தையில் அடிவயிற்றில் இருக்கும் நீர்க்கட்டி பகுதிக்குள் எட்டு கருக்கள் ஒன்றன்பின் பின் ஒன்றாக இருந்தது. இது மருத்துவ அடிப்படையில் ஃபீடஸ்-இன்-பெடூ(எப்ஐஎப்) என்று அழைக்கப்படுகிறது. இது தவறான முதுகெலும்பு கரு. 

எட்டு கருக்கள் பற்றிய வழக்கு இதுவரை எங்கும் பதிவாகவில்லை. இது மிகவும் அரிதானது, 5 லட்சத்தில் ஒருவருக்கு தான் இவ்வாறு உருவாகும் என்று அவர் கூறினார். 

அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் குழந்தை வீடு திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments