இந்தியா

மும்பை மருத்துவமனைக்கு அடியில் 132 ஆண்டு பழைமையான சுரங்கம்.. அதுவும்

DIN


மும்பையில் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அடியில், சுமார் 132 ஆண்டுகள் பழமையான சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 200 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கம், செங்கற்களால் தூண்கள் அமைத்து கடந்த 1890ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது.

இந்த சுரங்கத்துக்கு மேல் இருக்கும் கட்டடம் முன்பு மருத்துவமனை கட்டடமாக இருந்தது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிறகு இது மருத்துவமனையுடன் செயல்படும் செவிலியர் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், செவிலியர் கல்லூரியின் கட்டடத்தில், நீர் கழிவு புகார் வந்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இந்த கட்டடத்தை ஆய்வு செய்த போதுதான் 1890ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 1843ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அது கட்டிமுடிக்கப்பட்டு, 1845ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, முதலாமாண்டில் 8 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அன்றைய நாளில் வெளியான செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு, ரேபரேலி - ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி மீண்டும் முன்னிலை

பிரதமர் மோடி முன்னிலை!

SCROLL FOR NEXT