இந்தியா

பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட விவகாரம்: உ.பி.,யில் மருத்துவமனையின் உரிமையாளர் கைது

DIN

உ.பி.யில் டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் டெங்கு நோயாளி பிரதீப் பாண்டே கடந்த மாதம் பலியானார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை பூட்டி சீல்வைக்கப்பட்டது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இவ்விவகாரத்தில் 10 பேரை போலீசார் கைது ெசய்தனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் இச்சம்பவத்தில் மருத்துவமனையின் உரிமையாளர் பப்பு லால் சாஹு தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT